நண்பர்கள் கேலி செய்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி – இலங்கையில் சோகம்..!

Share this post:

girl

நண்பர்கள் கேலி செய்தமையால் மனைமுடைந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த மாணவி தூக்கிட்டு பத்து நாட்கள் கடந்த நிலையில், இவர் நேற்று வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது. தற்கொலை செய்துகொண்டுள்ள மாணவியின் தந்தை சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிலாபம் பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவி படிப்பிலும் சிறந்து விளங்கியுள்ளார்.

எனினும், தந்தையின் செயலை சுட்டிக்காட்டி பாடசாலை நண்பர் நண்பிகள் அடிக்கடி இம்மாணவியை கேலி செய்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மனமுடைந்த குறித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய குறித்த மாணவி “இனிமேல் பாடசாலை செல்ல போவதில்லை எனவும் நண்பர்கள் தன்னை கேலி செய்வதாகவும்” தனது தாயிடம் முறையிட்டுள்ளார்.

இதன் பின்னர் வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் மீட்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த மாணவி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...