வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த மாணவிக்கு ஆசிரியை கொடுத்த தண்டனையால் பரிதாபமாக பறிபோன மாணவியின் உயிர்..!! (Photos)

Share this post:

kolai2

இந்தியாவின் தெலுங்கானாவில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த 9 வயது மாணவி ஆசிரியை அளித்த தண்டனையால் உயிரிழந்துள்ளார்.

கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆங்கில பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த கோலிபகா ஹஷ்ரிதா (9), கடந்த 16ம் திகதி வீட்டுப்பாடம் செய்யாமல் சென்றுள்ளார். இதனால் கணக்கு ஆசிரியை கலா ஹஷ்ரிதாவை முழங்காலிடுமாறு கூறியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து, முழங்காலும், தொடையும் வலிப்பதாக சிறுமி தெரிவித்தும் ஆசிரியை கண்டுகொள்ளவில்லை.

மாலை வீட்டிற்கு சென்ற மாணவி கால்வலி தாங்காமல் அழுததால், அவரது தந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்தம் கட்டியிருப்பதாக தெரிவித்ததால், வாரங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மாணவிக்கு நேற்று காய்ச்சல் ஏற்பட்டு நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு பிறருடன் சேர்ந்து பள்ளியை சூழ்ந்துகொண்டனர்.

மாவட்ட கல்வி அதிகாரி பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்த பிறகே போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

kolau

kolai2

Share This:
Loading...

Related Posts

Loading...