யாழில் வீதியில் நின்று கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு கிடைத்த பரிசு…

Share this post:

wach

கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு 2 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்த நீதிவான் 50 மணித்தியாலங்கள் சமூதாய சீர்திருத்தப் பணியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

பருத்தித்துறையை சேர்ந்த 52 வயதுடைய நபரொருவர் , கடந்த ஞாயிற்றுக்கிழமை வீதியில் நின்று கைத்தொலைபேசியில் ஆபாசப்பட காணொளிகளை பார்வையிட்ட வண்ணம் இருந்துள்ளார்.

அவ்வேளை குறித்த வீதியின் ஊடக ரோந்து கடமையில் ஈடுபட்ட பொலிசார் அதனை அவதானித்தவுடன் குறித்த நபரிடம் இருந்து கைத்தொலைபேசியை கைப்பற்றியதுடன் , குறித்த நபரையும் கைது செய்தனர்.

கைது செய்த நபரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் பொ.சிவகுமார் முன்னிலையில் முற்படுத்திய போது குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவருக்கு , 2 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்த நீதிவான் 50 மணித்தியாலங்கள் சமூதாய சீர்திருத்தப் பணியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...