32 ஆண்டு முன்னர் முறிந்து போன தனது தாயின் காதலை உயிர்ப்பித்த மகள் – தாய்க்கு முன்னாள் காதலனுடன் திருமணம் முடித்து வைத்த மகள்!!! நெகிழ வைக்கும் பதிவுகள்…..??

Share this post:

ani

சினிமா பாணியில் தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்!

கேரளாவில் 1984ம் ஆண்டு கொல்லம் அருகில் உள்ள ஒச்சரியில் அனிதா என்னும் மாணவி 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது விக்ரமன் என்னும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார். அங்கு டியூசன் படிக்க சென்ற அனிதாவிற்கு விக்ரமன் மீது காதல் ஏற்பட்டது. விக்ரமனும் அனிதாவின் காதலை ஏற்றுக்கொண்டார். ஆனால் விக்ரமன் அனிதாவை விட 16 வயது மூத்தவர். எனவே அனிதாவின் பெற்றோர் அவளின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

அனிதாவை அவளின் விருப்பமில்லாமல் வேறு ஒருவருக்கு திருமணம் முடித்து வைத்துவிட்டனர். இதனால் மனமுடைந்த விக்ரமன் அந்த ஊரை காலி செய்து விட்டு வேறு ஊருக்கு சென்றுவிட்டார். ஆனால் அவர் கடைசி வரை திருமனமே செய்து கொள்ளாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகி தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

அதே நேரத்தில் அனிதாவும் தனது திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இல்லை. விக்ரமனை தவிர அவரால் வேறு யாரையும் மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் அனிதாவின் கணவரும் திருணமாகி கொஞ்ச வருடத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதனால் அனிதா தனது இரண்டு மகள்களையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேற்றினார்.

32 ஆண்டுகளுக்கு பிறகு விக்ரமன் மீண்டும் தனது கிராமத்திற்கு திரும்பி வந்தார். அப்போது அவரை அங்குள்ளவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் நிற்க சொன்னதால் அவரும் தேர்தலில் நின்றார். அப்ப்ப்போது தேர்தல் பிராச்சாரத்திற்கு செல்லும் போது மீண்டும் தனது முன்னாள் காதலி அனிதாவை சந்தித்துள்ளார்.

அனிதாவும் விக்ரமன் குறித்தும் தனது இளமை காலத்து காதல் குறித்து தனது மகள்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவது மகள் ஆதிரா அவரது அம்மாவின் காதலை புதுப்பிக்க முடிவு செய்தார்.

அதனால் ஆதிரா விக்ரமனை சென்று சந்தித்து அவரிடம் தனது தாயை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று கேட்டுள்ளார். ஆனால் விக்ரமன் முதலில் அதற்கு மறுப்பு தெரிவித்தார். ஆனால் ஆதிராவின் வற்புறுத்தலின் அடிப்படையில் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்.

ஆனால் ஆதிராவின் திருமணம் முடிந்த பிறகே விக்ரமன் அனிதாவை திருமணம் செய்ய சம்மதித்துள்ளார். அதனால் ஆதிராவும் தனது திருமணத்தை விரைவாக முடித்துக்கொண்டு தனது சகோதிரியுடன் சேர்ந்து தனது தாய்க்கும் விக்ரமனுக்கும் திருமணம் முடித்து வைத்தார்.

இவர்களது திருமணம் கடந்த 21ம் தேதி கேரளாவில் நடந்தது. ஆனால் இவர்களின் திருமணத்திற்கு தாலி எடுத்துக்கொடுத்ததே அனிதாவின் தந்தை தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 82 வயது.

அனிதாவின் திருமணம் நடக்கும் போது அவருக்கு 52 வயது, விக்ரமனுக்கு 68 வயது.

காதலுக்கு வயதில்லை என்பதும் உண்மையான காதல் எத்தனை வருடங்கள் ஆனாலும் நிச்சயம் வெற்றி பெறும் என்பதிற்கு அனிதா- விக்ரமன் காதல் ஜோடியே சாட்சி.

Share This:
Loading...

Related Posts

Loading...