13 மனைவிகளையும் ஒரே நேரத்தில் கர்ப்பிணியாக்கிய கைராசிக்கார கணவர்?

Share this post:

manaivi

13 கர்ப்பிணி மனைவிகளுடன் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் ஒருவரின் புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களை கலக்கி வருகிறது.

நைஜீரியா நாட்டை சேர்ந்த இந்நபர் தனது 13 மனைவிகளையும் ஒரேநேரத்தில் கருத்தரிக்க வைத்ததாக அடிக்குறிப்புடன் வெளியாகியுள்ள இந்த புகைப்படமும், படம்சார்ந்த தவலும் உண்மையாக இருக்குமா? அல்லது, பொய் தகவலா? என்பது உறுதிப்படுத்த முடியாத நிலை ஒருபுறம் இருந்தாலும் மேற்படி 13 பெண்களும் தங்களது கணவருடன் ஒரே வீட்டில் சண்டை, சச்சரவு இல்லாமல் வாழ்ந்து வருவதாக ஒரு உபரி தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும், இந்தப் பெண்கள் ஒருவரை மற்றவர் விட்டுக் கொடுக்காமல் தங்களது சக்களத்திகளைப் பற்றி மிக உயர்வாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

மனித உடலியல் அடிப்படையின்படி, முழு வளர்ச்சியடைந்த வீரியமான, ஆரோக்கியமான விந்தணு உருவாக 4 முதல் 5 வாரங்கள் தேவைப்படும். இந்நிலையில், மாத விலக்குக்கு பின்னர் 13 மனைவியருடனும் இவர் ஒரே மாதத்தில் உறவுகொண்டு அவர்கள் அனைவரும் அதே மாதத்தில் கருத்தரித்து, தற்போது பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருப்பது எப்படி? என்பது புரியாத புதிராகவே உள்ளது.

மேலும், இந்த 13 பெண்களுக்கும் பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே முழு ஆரோக்கியத்துடன் உறுப்பு குறைபாடில்லாமல் பிறக்குமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஒருவேளை, ஆண் மகப்பேறியல் டாக்டர் யாராவது தனது பேஷண்ட்களுடன் வேடிக்கையாக இப்படி போஸ் கொடுத்திருக்கிறாரா? என்பது அறிவார்ந்தவர்களின் தீர்மானமாக இருக்கலாம். எது எப்படியோ, இந்த வீடியோவை பார்த்தாலாவது தெளிவு பிறக்கிறதா? என்று பார்ப்போம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...