உலகின் முக்கிய துறைமுகங்களில் 26வது இடத்தைப் பிடித்த கொழும்பு துறைமுகம்!

Share this post:

colombo

உலகில் காணப்படும் முக்கிய 30 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம் 26வது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

துறைமுக அதிகாரசபையின் 37வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்நிலையில், 26வது இடத்தில் இருக்கும் கொழும்பு துறைமுகத்தை 2020ஆம் ஆண்டு 20வது இடத்துக்கு கொண்டுவருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஆண்டு துறைமுகத்தின் வருமானம் 6 பில்லியன் என துறைமுக அதிகாரசபையின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் தலைவர்களின் ஊழல்கள் அம்பலம்! – போர்சிட்டிக்கு அதிரடியாக சென்ற ஊடகவியலாளர்கள்

கடந்த கால அரசியல் தலைவர்கள் செய்த ஊழல்கள் தற்போது அம்பலமாகியுள்ளதாக கப்பல் துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை துறைமுக அதிகார சபையின் 37ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு ஊடகவியலாளர்களை போர்ட் சிட்டி தெற்கு மற்றும் வடக்கு நுழைவாயிலுக்கு அழைத்து செல்லும் நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணை நடத்தி அவர்களுக்கான தண்டனைகளும் வழங்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அதேபோன்று இவர்களின் தலைமையிலும் தலையீட்டிலும் துறைமுகங்களில் இருக்கக் கூடிய ஊழல்கள் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில், தொழிற்சங்கங்களுக்கு தேவையானது போல் செயலாற்ற முடியாது என தெரிவித்த அமைச்சர், மீண்டும் போர்ட் சிட்டி திட்டத்தை அடுத்த மாத இறுதியில் தொடர்ந்தும் வேலைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஊடகங்கள் மற்றும் வேறு எவராலும் செல்ல முடியதாத பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட இடங்களான தெற்கு மற்றும் வடக்கு நுழைவாயிலுக்கு ஊடகவியலாளர்கள் பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

Share This:
Loading...

Related Posts

Loading...