யாழ். பல்கலைக்கழகத்தில் படிக்க சிங்கள மாணவர்கள் அச்சம்..!

Share this post:

 

யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் தமது வகுப்புகளுக்கு சமூகமளிப்பதில் தொடர்ந்தும் அச்சத்துடன் இருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பிரிவுகளும் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

எனினும் நேற்றைய தினம் எந்தவொரு கற்றல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று பல்கலைக்கழக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே யாழ்.பல்கலைக்கழக மோதலின் பின்னர் கடந்த ஒருவார காலமாக சிங்கள மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

எனினும் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள சூழல் தொடர்ந்தும் பாதுகாப்பற்றதாகவே சிங்கள மாணவர்களால் உணரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு சமூகமளிப்பதில் அவர்கள் தொடர்ந்தும் அச்ச நிலையுடன் காணப்படுகின்றார்கள் என்றும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...