உறங்கிக் கொண்டிருந்த சிறுமி காமுகர்களிடம் சிக்கி கருகிய சோகம்..!

Share this post:

 

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த இளைஞர் ஒருவரை பல்லம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது சந்தேக நபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்சித்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக குறித்த மாணவி தமது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து பல்லம பொலிஸார் சந்தேக நபரை தேடிவந்துள்ளனர்.

இதன்போது, குறித்த சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, இதற்கு முன்னர் தேரர் ஒருவர் இவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

பக்தி பாட்டு போட்டிக்காக கொழும்பு பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றுக்கு வந்த போது, பக்தி பாடல் எழுதி தருவதாக கூறி குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் வேறொரு இளைஞர் அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

எனினும் இது தொடர்பாக பெற்றோர் எந்த தகவலும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மற்றைய இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தேரரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களும் ஆனமடுவ மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...