சவுதியில் இலங்கைப் பெண் ஒருவரை கொலை செய்து குழாயில் அடைத்த கணவன்..!

Share this post:

sawthi

சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த தனது மனைவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கிய அமெரிக்க பிரஜைக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம், கணவர் பணியாற்றிய பெட்ரோலிய தொழிற்சாலை ஒன்றின் குழாயில் காணப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றிய ஊழியர்களால் மீட்கப்பட்டதாக சவுதி பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீட்கப்படுவதற்கு 8 மாதங்களுக்கு முன்னர், இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக சட்ட வைத்திய பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அமெரிக்க பிரஜை தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதனையடுத்து அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.

குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...