தந்தையை கொடூரமான முறையில் கொலை செய்த பாசக்கார மகன்கள் – இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்..!

Share this post:

 

பெற்ற தந்தையை இரண்டு புதல்வர்கள் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.

அனுராதபுரம் கெபிற்றிக்கொல்லாவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய புதல்வர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

கடந்த 22ம் திகதி புதல்வர்களின் தாக்குதலுக்குள்ளான தந்தை பதவியா மருத்துவனையில்அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்து குறித்த நபரைவைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

பதவியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் பின்னர்; அனுராதபுரம்மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அனுராதபுரம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் நேற்று சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் கயாமடைந்ததாக தெரிவித்த போதிலும் பிரேதப் பரிசோதனையின் போதுதாக்குதலுக்கு இலக்காகியே காயமடைந்தமை தெரியவந்துள்ளது.

தமது தாயை தொடர்ச்சியாக தந்தை துன்புறுத்திய காரணத்தினால் புதல்வர்கள் தந்தையைதாக்கியுள்ளதாக விசரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...