லண்டனில் விற்பனைகுத் தயாராகும் இலங்கை இளநீர்..

Share this post:

ilani

இலங்கையின் இளநீர் லண்டனில் விற்பனை செய்யும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சில நிறுவனங்களினால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து இந்த இளநீர் விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனுக்கான இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் சுகீஸ்வர குணரட்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் லண்டனின் முக்கிய கடைத் தொகுதி ஒன்றில் இந்த இளநீர் விற்பனை நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இளநீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக பதில் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சிக்கு சில தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இளநீருக்கு பிரிட்டன் மக்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...