வைத்தியர்களின் அசமந்தப் போக்கினால் பறிபோன உயிர்..! யாழில் சம்பவம்…..

Share this post:

bofy

யாழ். இணுவில் பகுதியில் பாதசாரிகள் கடவையில் வைத்து மோட்டார் சைக்கிளில் மோதுண்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் முதியவரை மோதிய மோட்டார் சைக்கிள் சாரதியை பொலிஸார் காப்பாற்ற முயற்சிப்பதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த 22ஆம் திகதி 60 வதான தி.செல்வராசா என்பவர் இணுவில் பகுதியில் பாதசாரிகள் கடவை ஊடாக வீதியை கடக்க முயன்றுள்ளார்.

இதன் போது வேகமாக மோட்டார் சைக்கில் வந்த இளைஞர் ஒருவர் முதியவர் மீது மோதியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் முதியவர் அனுமிதிக்கப்பட்டார்.

குறித்த வைத்தியசாலையில், அவருக்கு 13 மணித்தியாலங்களாக சிகிச்சை வழங்கப்படாமல் இருந்த நிலையில் அந்த முதியவர் மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காலை 7.30 மணிக்கு குறித்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரிடம் மரணம் தொடர்பான விசாரணைக்கு உறவினர்கள் சென்றபோது சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறமுடியாது என கூறியுள்ள பொலிஸார், உறவினர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.

எவ்வாறாயினும், பொலிஸார் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையே முதியவரின் உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை சடலம் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமாரின் விசாரணைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...