மீன் பிடியில் ஈடுபட்டவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Share this post:

fish

ரஷியாவில் மீன் பிடிக்கச் சென்றபோது பெரிய மீன் சிக்கியுள்ளதாக தவறாக நினைத்து தனது நண்பரை ஒருவர் சுட்டுக் கொன்ற சோகம் நேர்ந்துள்ளது.

மத்திய ரஷியாவில் உள்ள ரயாஸான் என்ற மாகாணத்தில்தான் இந்த துரதிர்ஷ்ட சம்பவம் நடந்தது.

மாஸ்கோவைச் சேர்ந்த ஒரு நபர், தனது நண்பரை சந்திக்கச் சென்றுள்ளார்.

நண்பர்கள் இருவரும் சந்தித்தபிறகு, இரவு வேளையில் கடலில் மீன் பிடிக்கச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

நண்பர் மீன் பிடிப்பதில் திறமையானவர் என்பதால், அவரை வேறு பகுதியில் மீன்களைத் தேடுமாறு அனுப்பியிருக்கிறார்.

நீருக்குள் மீன்களை வேட்டையாடுவதற்கு ஈட்டித் துப்பாக்கியைப் பயன்படுத்துவார்கள். இந்த ஆயுதத்துடன் அந்நபர் மீன்களைத் தேடி அங்கும் இங்கும் அலைந்துள்ளார்.

அப்போது, தூரத்தில் கெளுத்தி வகையைச் சேர்ந்த மீன் ஒன்று நீந்திச் செல்வதைப் போல அவருக்குத் தோன்ற, உடனே அவர் தனது கையில் இருந்த ஈட்டித் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

துரதிர்ஷ்டவசமாக, ஈட்டித் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த ஈட்டி, குறி தவறாமல் தாக்கியுள்ளது. சிறிது நேரத்துக்குப் பிறகே, தான் தவறுதலாக தனது நண்பரைச் சுட்டுவிட்டதை அவர் உணர்ந்திருக்கிறார்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த 27 வயது நபர், கடலிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

மீன் பிடிக்கச் சென்றபோது எதிர்பாராமல் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...