மஹிந்த ராஐபக்க்ஷ மீண்டும் ஜனாதிபதியா? அதற்கும் நாங்கள் தயார்! – பிரதமர்….

Share this post:

mahintha

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கு ஊடகங்கள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆரதாவான கூட்டு எதிர்க்கட்சி, அரசாங்கத்திற்கு எதிராக அடுத்த வாரம் கண்டியிலிருந்து பாதயாத்திரை ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

இந்நிலையில், மஹிந்த ராஜபக்சவை மீண்டும் இலங்கையின் ஜனாதிபதியாக கொண்டு வருவதற்கு ஊடகங்கள் முயற்சிக்கின்றன.

அரசாங்கத்தை விமர்சிக்கும் சுதந்திரம் ஊடகங்களுக்கு உண்டு. அதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. அதனை ஊடகங்கள் விருப்பம் போல் செய்யலாம்.

எனினும், முரடர்களை மீண்டும் நாட்டின் ஆட்சியில் கொண்டு வர முயசிக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்து, மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர முயற்சித்தால், அதற்கும் நாங்கள் தயாராகவே இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...