வெளிநாட்டில் இருந்து வரும் காதலியை ஆச்சரியப்படுத்த முயற்சித்த காதலனுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிகழ்ந்த சோகம்..!

Share this post:

love

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா அணிந்து விமான நிலையத்தில் நின்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இளைஞரின் காதலி வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்துள்ளார்.

விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் இடத்தில் இந்த இளைஞர் புர்கா அணிந்து காத்து கொண்டிருந்துள்ளார்.

புர்கா அணிந்திருக்கும் நபர் மீது சந்தேகம் கொண்ட பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அவரை கைது செய்து விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் இளைஞரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வரும் தனது காதலியை ஆச்சரியப்படுத்துவதற்காக தான் புர்கா அணிந்து வந்ததாக இளைஞர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்

Share This:
Loading...

Related Posts

Loading...