கள்ளக்காதலனை வைத்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி..!

Share this post:

kallak

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கல்லுவிலையை சேர்ந்தவர் ஜெகன்ஸ்பாபு(31). வெளிநாட்டில் சில ஆண்டுகள் வேலை பார்த்தார். பின்னர் ஊருக்கு வந்த அவருக்கு கடந்த ஜூன் 8ம் தேதி அதே பகுதியை சேர்ந்த அஜீதாவுடன் திருமணம் நடந்தது. அஜீதா சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸாக ேவலை பார்த்து வருகிறார்.

மனைவியை பார்ப்பதற்காக கடந்த 7ம் தேதி நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் சென்னைக்கு சென்ற ஜெகன்ஸ்பாபு 8ம் தேதி அதிகாலை திருச்சி ஜங்ஷன்-பொன்மலை ரயில் நிலையங்களுக்கு இடையே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

ஜெகன்ஸ்பாபுவின் பிரேத பரிசோதனையில், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், சென்னையை சேர்ந்த டாக்டர் பெயரில் அஜீதாவின் கள்ளக்காதலன் அதே ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் ஜான்பிரின்சும்(25), அஜீதாவும் சேர்ந்து திட்டமிட்டு ஜெகன்ஸ்பாபுவை கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. இதையடுத்து போலீசார் ெசன்னையில் ஜான்பிரின்சை கைதுசெய்தனர்.

விசாரணையில் போலீசில் ஜான்பிரின்ஸ் அளித்த வாக்குமூலம்:

நான் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள அஜீதா வேலை செய்யும் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறேன். அந்த பழக்கத்தில் நானும், அஜீதாவும் காதலித்து வந்தோம். ஆனால், அஜீதாவின் பெற்றோர் கடந்த மாதம் ஜெகன்ஸ்பாபு என்பவரை அஜீதாவுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்துக்கு பின்பு சில நாட்கள் கழித்து மீண்டும் வேலைக்கு சென்னை வந்த அஜீதா, ஜெகன்ஸ்பாபுவுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்று என்னிடம் கூறி அழுதார். கணவரை எப்படியாவது தீர்த்து கட்டிவிடு, பின்னர் நாம் திருமணம் செய்து மகிழ்ச்சியாக சேர்ந்து வாழலாம் என்றார். இதைதொடர்ந்து எனது அறையின் எதிர் அறையில் இருந்த வெங்கட்ராமனின் செல்போனில் இருந்த சிம்கார்டை எடுத்தேன். பின்னர் வேறொரு செல்போனில் அதை போட்டு அதில் இருந்து ஜெகன்ஸ்பாபுவிடம் தான் சென்னை கேளம்பாக்கத்தில் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சொக்கலிங்கம் பேசுவதாக கூறி நண்பரானேன்.

அப்போது ஜெகன்ஸ்பாபுவிடம் செல்போனில் பேசி நீங்கள் சென்னைக்கு 8ம் தேதி வருமாறும். நான் உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் விருந்து கொடுப்பதாகவும் கூறினேன். பின்னர் நானும் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு கடந்த 7ம் தேதி சென்றேன். அன்று ஜெகன்ஸ்பாபு நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து சென்னை புறப்பட்டார்.

அப்போது மீண்டும் அவரிடம் நான் செல்போனில் தொடர்பு கொண்டு நானும் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருப்பதை கூறினேன். ஒரே ரயிலில் முன்பதிவு அல்லாத பெட்டியில் நான் முன்பும், அவர் பின் பெட்டியிலும் பயணம் செய்தோம். 3 ரயில் நிலையங்களை ரயில் கடந்ததும், அவர் என்னை பார்க்க எனது பெட்டிக்கு வந்தார். அப்போது அவரிடம் நான் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் சென்னை செல்வோம் என்றேன்.

அதன்படி நள்ளிரவு இருவரும் திருச்சியில் இறங்கினோம். பின்னர் ஜெகன்ஸ்பாபுவை முடுக்குப்பட்டி பாலம் அருகே உள்ள தண்டவாளத்துக்கு அழைத்து சென்றேன். அங்கு அவரை கழுத்தை நெரித்து கொன்றேன். இவ்வாறு ஜான்் பிரின்ஸ் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து, குமரிக்கு சென்று அஜீதாவையும் போலீசார் கைது செய்து திருச்சி அழைத்து வந்தனர். இருவரையும் திருச்சி ஜேஎம் 4ம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறைகளில் அடைத்தனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...