வவுனியா பாடசாலை மாணவி ஒருவரின் கோரிக்கைக்கு மதிப்பளித்த ஜனாதிபதி

Share this post:

sirumi

வவுனியா மடுகந்தை தேசிய பாடசாலை மாணவி ஒருவர் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த பாடசாலையின் மாணவர்கள் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு அழைப்பின் பேரிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது.

அண்மையில் ஜனாதிபதி வவுனியா போகஸ்வெவ பிரதேசத்திற்கு மேற்கொண்ட ஒரு விஜயத்தின்போது வவுனியா மடுகந்தை தேசிய பாடசாலையின் தாரிக்கா மிஹிரங்கி என்ற மாணவி ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையையொன்றை முன்வைத்தார். தமது பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை தமக்கு பெற்றுத் தர வேண்டுமென்பதாகும்.

பல்வேறு வேலைப் பளுவிற்கு மத்தியிலும் அம்மாணவியின் கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிமடுத்திருந்ததோடு, அவ்விஜயத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து மடுகந்தை தேசிய பாடசாலை பிள்ளைகளுக்கு தொலைபேசி மூலம் அழைப்புவிடுக்கப்பட்டது.

அந்த வகையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த பிள்ளைகளை ஜனாதிபதி அன்புடன் வரவேற்றார். ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டதன் பின்னர் ஜனாதிபதியுடன் ஒரு சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட பிள்ளைகள், தமது பாடசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தினர்.

குடிநீர் வசதியை ஏற்படுத்துதல், புதிய விஞ்ஞான ஆய்வுகூட வசதிகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

அக்கோரிக்கைகள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது தொடர்பாக உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியது மட்டுமன்றி, அடுத்த மாதம் மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஒரு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்வதாகவும் அவர்களிடம் உறுதியளித்தார்.

பாடசாலை பிள்ளைகளுக்காக பகல் போசனமும் ஜனாதிபதி அலுவலகத்தில் தயார்படுத்தப்பட்டிருந்ததோடு, ஜனாதிபதியும் அம்மாணவர்களுடன் பகல் போசனத்தில் இணைந்துகொண்டார்.
பல்வேறு வேலைப்பளுக்களுக்கு மத்தியில் தமக்கு இச்சந்தர்ப்பத்தை வழங்கியமைக்காக மகிழ்ச்சி தெரிவித்த பிள்ளைகள், தமது கனவு நனவானமை தொடர்பாக மிகுந்த மகிழ்ச்சியுடன் ஜனாதிபதி மாளிகையில் இருந்து சென்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...