பூட்டிய வீட்டுக்குள் எரிந்து கருகிய குடும்பத்தின் துயரம்….

Share this post:

kudumpam

இந்தியாவில் மண்ணந்தலையில் பூட்டிய வீட்டிலிருந்து உடல் கருகிய நிலையில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தையடுத்த அமரவிளையை சேர்ந்த அனில்ராஜ் (வயது 35),அவரது மனைவி அருணா (31), அவர்களின் மகள் அனிஷா (4) ஆகிய மூவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்

அனில்ராஜ் தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து நேற்று தீயினால் கருகிய துர்நாற்றம் வந்துள்ளதையடுத்து, அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டுக்குள் அனில்ராஜ், அவரது மனைவி அருணா, மகள் அனிஷா ஆகிய 3 பேரும் உடல் கருகி இறந்து கிடந்தனர்.

வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் குளிர்சாதனப்பெட்டி ஆகியவை வெடித்து தீப்பிடித்து கருகி கிடந்தன.இது பற்றி அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பொலிஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

பூட்டிய வீட்டுக்குள் அனில்ராஜ் மற்றும் அவரது மனைவி, மகள் கருகி இறந்தது எப்படி? அவர்களாக தீ வைத்து தற்கொலை செய்தார்களா? அல்லது வீட்டில் தீப்பிடித்து கருகி இறந்தார்களா? என்பது மர்மமாக உள்ளது.

இது பற்றி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share This:
Loading...

Recent Posts

Loading...