பணம் கொடுக்க மறுத்த அண்ணண்: மக்கள் முன்னிலையில் மார்க்கெட்டில் வைத்து வெட்டிய தம்பி…!

Share this post:

kaththiyaal;

கோயம்பேடு மார்க்கெட்டில் செலவுக்கு பணம் கொடுக்க மறுத்த அண்ணனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய தம்பியை பொலிசார் தேடி வருகின்றனர்.

திண்டிவனம் அடுத்த கடவுபாக்கத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது-47),

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது தம்பி புருஷோத்தமன் (வயது-42), தனியார் நிறுவன கார் டிரைவர்.மதியழகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தம்பி புருஷோத்தமனுக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்து கொடுத்துள்ளார்.

புருஷோத்தமன் கடையை நடத்தாமல் ஊதாரித்தனமாக சுற்றித்திரிந்துள்ளார். இதனால் அவருக்கு கடன் தொல்லை அதிகரித்தது. கார் டிரைவர் தொழிலிலும் போதிய வருவாய் இல்லாததால், அண்ணன் மதியழகனிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு புருஷோத்தமன் மதியழகனிடம் பணம் கேட்டதாகவும், அதற்கு மதியழகன் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை 5.30 மணியளவில் மதியழகன் கடையில் காய்கறிகளை அடுக்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த புருஷோத்தமன் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மதியழகனை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

அக்கம் பக்கத்து கடைக்காரர்கள், மதியழகனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் பொலிசார் வழக்குப்பதிவு செய்து, புருஷோத்தமனை வலை வீசி தேடி வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...