புலம்பெயர் தமிழர்களை இலங்கையில் வந்து குடியேறுமாறு மீள அழைக்கும் அரசாங்கம்…!

Share this post:

tamilar

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்களை மீளவும் குடியேறுமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

எனினும், யுத்த காலத்தில் பல்லாயிரகணக்காக தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் மீளவும் இலங்கைக்கு திரும்ப முடியும் எனவும், அதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் அரசாங்கம் கூறியுள்ளது.

இதற்காக அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் உள்ள இலங்கை தூதரகத்தில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காணமல் போனவர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்ய முடியும் என இலங்கை அரசாங்கம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...