கைது செய்வதிலும் பார்க்க சுடுவது எமக்கு இலகுவானது! இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இலங்கை அரசாங்கம்..!

Share this post:

sudu

அத்துமீறும் தமிழக மீனவர்களை கட்டுபடுத்த துப்பாக்கிச் சூடு நடத்துவதே ஒரே வழியென அரசாங்கம் அறிவித்துள்ளது.

வட மாகாண மீனவ சங்கத் தலைவர்களுடன் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் அதனை ஒருபோதும் அமுல்படுத்தாது என்ற எண்ணத்திலேயே இந்திய மீனவர்கள் தொடர்ந்தம் அத்துமீறுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்திய மீனவர்களை கைதுசெய்வதிலும் பார்க்க அவர்களை சுடுவது எமக்கு இலகுவான விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடற்படையினருக்கு இந்திய மீனவர்களை சுடுவதற்கான அனுமதியை வழங்கியிருந்திருந்தால் மீனவர் பிரச்சினைக்கு என்றோ நாம் தீர்வை கண்டிருக்கலாம்.

எனினும், துப்பாக்கியால் சூடு நடத்தி இரு நாடுகளுக்கு இடையில் பகைமையை வளர்த்துக்கொள்ளும் நோக்கம் இலங்கை அரசாங்கத்துக்கு கிடையாது.

எவ்வாறாயினும், கலந்துரையாடல் மூலம் இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண்பதற்கே நாம் தொடர்ந்தும் முயற்சிக்கின்றோம்.

இதேவேளை, இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் கடற்படையினரின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தவும் தளர்த்தவும் அரசாங்கம் எச்சந்தர்ப்பத்திலும் பணிப்புரை விடுத்ததில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...