சவூதியில் கொலை செய்யப்பட்ட இலங்கையரின் உடலை சவூதியிலேயே அடக்கம் செய்ய குடும்பத்தினர் அனுமதி!

Share this post:

ast

சவூதி அரேபியாவில் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட இலங்கையரின் உடலை அங்கேயேஅடக்கம் செய்ய குடும்பத்தினரின் அனுமதி கிடைத்துள்ளது.வெளியுறவு அமைச்சின் ஆலோசனைப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது

கெக்கிராவையை சேர்ந்த 32 வயதான இந்த இலங்கையர் சில நாட்களுக்கு முன்னர்கொல்லப்பட்டார்.

சம்பவம் குறித்து இன்னும் பொலிஸ் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே தகவல்கள் எதனையும் வெளியிடமுடியவில்லை என்று வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும் அரப் செய்தியின்படி கொல்லப்பட்டவர் பணியாற்றிய யன்பு என்ற பிரதேசத்தின்பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் யேர்மனியர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...