ஆண் ஒருவருக்கு கர்ப்பமாக இருப்பதாக மருத்துவ அறிக்கை கொடுத்த பிரபல வைத்தியசாலை…! – இவர்களிடம் எப்படி வைத்தியம் பார்ப்பது மக்கள் அதிர்ச்சி..!

Share this post:

vai

சூரியவெவ பிரதேசத்தில் சிறுநீர், இரத்தமாதிரிகளை பரிசோதித்த 35 வயதுடைய ஆண் நபர் ஒருவருக்கு கர்ப்பம் தரித்துள்ளதாக மருத்துவ அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தனியார் வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், அதன் அறிக்கையினை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மருத்துவ அறிக்கையில் அவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தால் அவர் அதிர்ச்சியுடன், வெட்கமும் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பிரதேசத்தில் இவ்வாறு பலருக்கு தவறான மருத்துவ அறிக்கைகள் வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நோயாளிகள் பலரும் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் குறித்த மருத்துவ பரிசோதனை நிலையத்தை நடாத்திச் செல்லும் இடத்தில் உள்ள இரசாயன ஆய்வுகூடத்தில் சாதாரணதரம், உயர்தரம் படித்தவர்களே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதால் தவறான மருத்துவ அறிக்கைகள் வழங்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...