ரூ.1 லட்சம் கொடுத்து பெற்ற மகளையே கொன்ற தந்தை..!

Share this post:

kol;ai

நாமக்கல் பிளஸ் 1 மாணவி கொலை வழக்கில் அவரது தந்தை உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் அருகே உள்ள வேலக்கவுண்டன் பட்டியை சேர்ந்த செல்வம் – சுமதி தம்பதியினரின் மகள் காவ்யா கடந்த 15ஆம் திகதி கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த வழக்கில் காவ்யாவின் தந்தை செல்வம், அத்தை வெண்ணிலா, மற்றும் சங்கர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக செல்வமும், சுமதியும் பிரிந்து வாழ்கின்றனர். விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

குடும்ப பிரச்சினை காரணமாக பெற்ற தந்தையே ரூ.1 லட்சம் கொடுத்து மகளை கொலை செய்துள்ளது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...