தற்கொலைக்கு முயன்ற எஜமானை காப்பாற்றிய நாய்..!

Share this post:

dog

தமிழ்நாட்டின் வாழப்பாடி அருகே தற்கொலைக்கு முயன்ற எஜமானை பிஸி என்ற நாய் காப்பாற்றியுள்ளது.

சேலம் வாழப்பாடி அருகே அக்ரஹாரம் வைத்தி படையாச்சித் தெரு, ஆடு அடிக்கும் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(50). கூலித் தொழிலாளியான இவர் தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்று வளர்த்து வந்தார். இதற்கு பிஸி என்று பெயர் வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் சண்டை போட்டு விட்டு வெளியே சென்று விட்டார். வெகு நேரமாகியும் ரவிச்சந்திரன் வீட்டிற்கு வராததால் பிஸி தேடிச் சென்றுள்ளது.

அப்போது, அந்த பகுதியில் உள்ள தனியார் கயிறு திரிக்கும் கம்பெனி அருகே ரவிச்சந்திரன் அமர்ந்திருப்பதை பிஸி கண்டுபிடித்து அவர் அருகில் சென்றது. ஆனால் ரவிச்சந்திரன் பிஸியை வீட்டிற்கு செல்லுமாறு விரட்டியுள்ளார்.

பின்பு, வீட்டிற்கு வந்த பிஸி ரவிச்சந்திரனின் மகனான குமார் படுத்திருந்த கட்டிலைப் பார்த்து சத்தமாக குறைத்தது. ஆனால் குமார் எழுந்திரிக்கவில்லை. பின்பு குமார் அணிந்திருக்கும் சட்டையை கடித்து இழுத்தது. உடனே குமார் எழுந்திரிக்க பிஸி சத்தமாக குறைத்துக் கொண்டே ரவிச்சந்திரன் இருக்குமிடத்திற்கு ஓடியது. குமாரும் பின்னாடியே ஓடினார்.

அங்கு, ரவிச்சந்திரன் துக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்வதைக் கண்ட குமார் வேகமாக ஓடிப்போய் அவரை காப்பாற்றினார்.

தக்க சமயத்தில் எஜமானின் உயிரைக் காப்பாற்றிய பிஸி என்ற நாயை ரவிச்சந்திரன் குடும்பத்தினர் விருந்து அளித்து பாராட்டியுள்ளனர்.

அறிவு கூர்மையால் எஜமானைக் காப்பற்றிய நாயை அப்பகுதி மக்கள் அனைவரும் வியந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...