விபத்தில் பலியான இளைஞன் – செய்தி கேட்டு அதிர்ச்சியில் அப்பம்மாவும் பலி..!

Share this post:

death

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் கோடமேட்டினை சேர்ந்த மகாலிங்கம் டினேஸ்குகன் (19 வயது) இன்று அதிகாலை விபத்தில் பலியாகியுள்ளார்.

சிறியரக கன்டர் வாகனத்தில் தாந்தமலை ஆலயத்திற்கு சென்றுவரும் போது மாங்காட்டில் மின்சாரக்கம்பத்துடன் மோதியதிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனை கேள்வியுற்ற இளைஞனின் அப்பம்மா அதிர்ச்சியில் மரணித்துள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.

இரு சடலங்களும் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...