இது திருமணம் ஆன ஆண்களுக்கு மட்டுமான பதிவு – பெண்கள் வாசிக்க தடை

Share this post:

GIRL

கல்யாணம் ஆன போது இருந்த அன்யோன்யம் நாள் ஆக ஆக குறைந்து அடிக்கடி சண்டை, பிரச்சனை என இருக்கும் வீடா உங்களுடையது?அப்ப இது உங்களுக்கு தான்.

இந்த டிப்ஸை எல்லாம் நீங்க பாலோ பண்ணா உங்க மனைவி அப்படியே பூரிச்சு போய்டுவாங்க. அப்புறம் சண்டை எங்க? ஒரே சந்தோசம் தான்.

தினமும் அவங்க தான் எந்தியிருச்சு காபி போடறாங்க? ஒரு சேஞ்சுக்கு நீங்க காபி போட்டுகொண்டு போய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க. லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டைய ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க.

ஆபிஸ் போயிட்டு வந்ததும் அங்க இருக்கிற கோபத்தை எல்லாம் இவங்க மேல காமிக்காமல், வந்ததும் ஒரு காபி குடுமான்னு சொல்லுங்க, அவங்க தோள்ல சாஞ்சு உட்காருங்க, ஏதாவது பிரச்சனைனா அவங்கிட்ட சொல்லுங்க, அப்பறம் பாருங்க உங்களை விழுந்து விழுந்து கவனிப்பாங்க.

கல்யாணம் ஆன புதுசுல தான் அவங்க அழகை பத்தி பேசியிருப்பீங்க. இப்பயும் அப்படி பேசுங்க. இந்த சேலை நல்லா இருக்கு, இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க, இந்த ஹேர்ஸ்டைல்இப்படி போட்ட நல்லா இருக்கும்னு தினமும் ஏதாவது சொல்லுங்க. நீங்க அவங்களை ரசிக்கணும்னு உங்க மனைவி கண்டிப்பா ஆசைப்படுவாங்க.
முடி எப்படியிருக்கு, சீவியது நல்லாயிருக்கா? சட்டைமேட்சாகுதா? போன்ற கேள்விகளைக்கேட்டு அதன்படி மாற்றிக்கொள்ளணும்.

ஒருநாள் சாயங்காலம் முழுவதும் தொலைக்காட்சி ரிமோட்டை அவங்க கிட்டகொடுத்து விருப்பப்பட்ட சேனலை பார்க்கவிடுங்கள்.

வீட்டின் சமையலறையில் இருக்கும் சாமான்களை நோட்டமிடுங்கள், தீரும் நிலையில் உள்ள பருப்பு , எண்ணெய், காபித்துள் போன்றவற்றை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள். கூடவே அவங்களுக்குப் பிடித்த நொறுக்குத்தீனி எதாவது!!

குற்றம் கண்டுபிடித்து குறை சொல்வதை கொஞ்சம் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கவும்!

மனைவியுடன் பேச நேரம் ஒதுக்கிவிடுங்கள், ஊன்றி கவனியுங்கள். கொஞ்ச நேரம் கழித்து ‘இப்ப என்ன சொன்னே’ன்னு அசால்டா கேட்கக்கூடாது.

Share This:
Loading...

Recent Posts

Loading...