காதலிக்க மறுத்த பெண்ணை வெட்டிய இளைஞன் – தமிழன் வீரத்தை எங்க காட்டுறான்..!

Share this post:

Girl_killed_by_1770

சென்னையில் ஒரு தலைக்காதல் காரணமாக கல்லூரி மாணவியை, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பிளேடால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான வினோத் குமாருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.

இருப்பினும் அப்பகுதியை சேர்ந்த கல்லூரியில் படிக்கும் இளம்பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்துள்ளார்.அந்த மாணவி கல்லூரிக்கு செல்லும்போதெல்லாம் பல முறை தனது காதலை வினோத் தெரிவித்துள்ளார்.

இதற்கு அந்த மாணவியும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை வழிமறித்த வினோத்,மீண்டும் தனது காதலை சொல்லியுள்ளார்.

இதற்கு அந்த மாணவி எதிர்ப்பு தெரிவிக்கவே,கோபமடைந்த வினோத் தன் கையில் இருந்த பிளேடை கொண்டு மாணவியின் கழுத்தை அறுக்க முயற்சி செய்துள்ளார்.ஆனால் வினோத்திடம் இருந்து சாமர்த்தியமாக தப்பித்த மாணவியை,மீண்டும் கையில் பிளேடால் வினோத் வெட்டியுள்ளார்.

வலியால் அலறித் துடித்த மாணவியின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர்,மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வினோத் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக இருந்த அவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...