இணையத்தளங்கள் , தொலைபேசி ஊடாக சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு! – தடுக்க புதிய தொலைபேசி இலக்கம்..!

Share this post:

sort

இணையங்கள் மற்றும் கைத்தொலைபேசிகள் ஊடாக சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது. இணையங்கள், கைத்தொலைபேசிகள் ஊடாக சிறுவர்கள் வெவ்வேறு முறைகளில் துன்புறுத்தப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுவர்கள் மீதான பாலியல் தொல்லைகள் தொடர்பில் முறையிடுவதற்கு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி, 0773220032 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறையிடலாம் என அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், குறித்த தொலைபேசி இலக்கம் ஊடாக குறுந்தகவல், வட்ஸ்அப், வைபர் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முறையிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இத்தொலைபேசி இலக்கமானது ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி முதல் 24 மணிநேரமும் செயற்படும் என அந்த அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...