அதிக வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த இளைஞனுக்கு வந்த விபரீதம் – இளைஞன் பலி…(Photos)

Share this post:

3

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் எருவில் கோடைமேடு பிரதேசத்தினை சேர்ந்த டினேஸ்குமார் (19) என்ற இளைஞனே விபத்தில் பலியாகியுள்ளதாக அறியமுடிகின்றது.

மோட்டார் சைக்கிளின் அதிவேக பயணம் காரணமாக தொலைபேசி கம்பம் ஒன்றில் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் இருவர் பயணம் செய்த போதிலும் ஒருவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பியதாகவும், மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

2

1

Share This:
Loading...

Related Posts

Loading...