முதல் பயணத்திலேயே விமானம் விபத்து பரிதாப பறிபோன 5 பேரின் உயிர்…

Share this post:

VIMANA

சீனாவில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் 5 பேர் பலியாகினர். சீனாவை சேர்ந்த ஏவிஐசி ஜாய் ஜெனரல் விமான நிறுவனம், தண்ணீரில் இருந்து புறப்பட்டு செல்லும் விமான சேவையை (ஆம்பிபியன் விமானம்) ஷாங்காயில் இருந்து சோசுவான் நகரத்துக்கு முதல் முறையாக தொடங்கியது.

இந்த விமானத்தில் 10 பேர் பயணம் செய்தனர்.

அப்போது, விமானம் புறப்பட்டு செல்கையில் நெடுஞ்சாலை மேம்பாலத்தில் எதிர்பாராத விதமாக மோதி தண்ணீரில் விழுந்தது.

இதில் விமானத்தில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.

விரைந்து வந்த மீட்புக்குழுவினர் அனைவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதில் சிகிச்சை பலனின்றி 5 பேர் பலியாகினர்.

மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Share This:
Loading...

Related Posts

Loading...