பத்து நாட்களாக கள்ளக் காதலன் பார்க்க வரவில்லை? தூக்குப் போட்டு தற்கொலை செய்த தமிழ்ப் பெண்..

Share this post:

THOOKKU

தமிழகத்தில் கள்ளக்காதலன் பத்து நாட்களாக பார்க்க வராததால் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை திருநீலகண்டன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி, இவருடைய மனைவி தீபா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்நிலையில் மாதவரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தீபா சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது சடலத்தை கைப்பற்றிய பொலிசார் விசாரணை நடத்தியதில், தீபாவுக்கும், எருக்கஞ்சேரி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கண்ணையன் என்பவருக்கும் தகாத உறவு இருந்தது தெரியவந்தது.

மேலும் கணவன், பிள்ளைகளை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடி வந்ததும், இருவரும் மாதவரம் பகுதியில் வீடு எடுத்து கடந்த ஒரு மாத காலமாக கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

இதற்கிடையே கடந்த பத்து நாட்களாக கண்ணையன் வீட்டுக்கு வராத காரணத்தினால் மனமுடைந்த தீபா, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக கண்ணையன், இவருக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக உறவினர்களான ராணி மற்றும் சந்திரா ஆகிய மூவரை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...