நபரொருவரை அடித்துக்கொன்ற அண்ணன் தம்பிக்கு மரணத் தண்டனை அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

Share this post:

sud_court_260815

2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் திகதி அக்குரஸ்ஸ வில்பிட பிரதேசத்தில் 50 வயதான நபரை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இரு சகோதரர்களுக்கு எதிராக மாத்தறை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் நீண்டகாலமாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பை அறிவித்த நீதிபதி குற்றவாளிகளான சகோதரர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

அக்குரஸ்ஸ வில்பிட பிரதேசத்தை சேர்ந்த 35 மற்றும் 33 வயதான சகோதரர்களுக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...