மட்டக்களப்பில் அதிகரித்து வரும் தற்கொலைகள்! – அதிர்ச்சியில் மக்கள்..!

Share this post:

sad

போருக்குப் பின்னரான காலப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகள் தொடர்பிலான ஆராய்வு கருத்துப் பகிர்வு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி காலை 9.45 அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக தகவல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன்போது தற்கொலை சம்பவங்கள் தொடர்பான ஊடக அறிக்கையிடல்கள், மேலும் தற்கொலைகளை ஊக்குவிக்காத வண்ணம் கவனமாகக் கையாளப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்படவுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...