ஆணிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன?

Share this post:

aan

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவை எல்லாம் பெண்களுக்கே உரித்தான ஒன்று, ஆனால் இவற்றை ஆண்களிடம் எதிர்பார்த்தால் எப்படி இருக்கும்.

எதிர்பார்த்துதான் பாருங்களேன், நிலைமை தலைகீழாக மாறிவிடும், பொதுவாக ஆண்கள் என்றாலே பெண்கள் சில விடயங்களை எதிர்பார்ப்பார்கள், தைரியமானவன், பொறுப்பானவன், தன்னை பூ மாதிரி பார்த்துக் கொள்ளப் போகிறவன், எதற்கும் கலங்காத அஞ்சா நெஞ்சம் படைத்தவன், அவளிடம் ஆசையாய் பேசி, காதல் மழையில் நனைத்து களிப்புற வைக்கப் போகிறவன்.

தன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் திரும்பிக்கூட பார்க்க மனம் வராதவன் என்று எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுடன் வைத்திருப்பார்கள்.

ஆனால், பெண்கள் ஆசைப்படுவது போல அதிகமான ஆண்கள் இருப்பதில்லை.

A man is not born, he is made. பிறக்கும் போதே யாரும் பேராண்மை மிக்கவனாய் இருப்பதில்லை. அவனை இப்படி ஓர் ஆண்மகனாய் மாற்றுவது தான் பெண்களின் மிகப்பெரிய சமூகப்பணி.

தாயாய், தமக்கையாய், மனைவியாய், மகளாய், மருமகளாய், இருந்து பெண்கள் எல்லோரும் தொடர்ந்து பதப்படுத்திக் கொண்டே இருந்தால் ஒழிய அக்மார்க் ஆண் உருவாவதே இல்லை.

நீங்கள் எந்த பேராண்மைமிக்க மனிதனை வேண்டுமானாலும் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்களேன், அவர்கள் எல்லாம் அத்தனை பேராண்மையைப் பெறக் காரணம், அவர்களை அப்படி பதப்படுத்திய பெண்களே.

பெரும்பாலான ஆண்கள் எல்லோருமே சாமானியர்கள்தான். அதனால் தான் அவர்களுக்கு பெண் ஒரு முக்கியமான ஈர்ப்பு விசை ஆகிறாள்.

இதுதான் யதார்த்தம் என்பதால், ஆண்களை கையாள விரும்பும் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம், acceptance. அதாவது, நிபந்தனையற்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை.

ஆண்களை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ளப் பழகினால் தான், ஆண்களை கையாண்டு அடுத்த கட்டத்திற்கு நீங்கள் நகர முடியும்.

Share This:
Loading...

Recent Posts

Loading...