ஐரோப்பாவிற்கான மீன் ஏற்றுமதியில் திணறும் இலங்கை..!

Share this post:

fish

ஐரோப்பிய நாடுகளின் தேவைக்கு ஏற்றளவு, மீன்களை விநியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் 1000 மெட்ரிக் தொன் மீன்களை கோரியுள்ளன. ஆனால் உள்ளூரில் மீன்களின் கையிருப்பு குறைவாக இருப்பதால், 200 மெட்ரிக் தொன் மீன்களே இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன

அந்த நாடுகளின் தேவையை நிறைவு செய்ய முடியாதிருப்பதாக, இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர கவலை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்ட பின்னர், 200 மெட்ரிக் தொன் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மீன் ஏற்றுமதி நிறுவனங்களால் 1000 மெட்ரிக் தொன் மீன்கள் கோரப்பட்ட போதும், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், அந்த நிறுவனங்களின் கேள்விப் பத்திரங்களை ரத்து செய்ய வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...