யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 22 கைதிகள் திடீர் உண்ணாவிரதம்…

Share this post:

kaithi

யாழ் சிறைச்சாலையில் கைதிகள் 22 பேர் இன்று காலை முதல் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயர்நீதிமன்றில் தமது பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே குறித்தகைதிகள் உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருள் பாவனை,போதைப்பொருள் விற்றல் மற்றும்தம்மிடம் போதைப்பொருளினை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...