ஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டி பல பெண்களிடம் பணம் பறித்த இளைஞன் கைது..!

Share this post:

paam

இளம் பெண்ணிடம், ஆபாச படத்தை இணையத்தளத்தில் வெளியிடபோவதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறியதாவது, சென்னை அருகே உள்ள குன்றத்தூரைச் சேர்ந்த ஒரு இளம் பெண், குன்றத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், தனது கைப்பேசியை தொடர்புக் கொண்டு பேசிய ஒரு மர்ம நபர், தனது பெயர் பிரகாஷ் என்று அறிமுகமாகிக் கொண்டு, எனது ஆபாச படங்கள், வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரிகார்டு வைத்திருப்பதாக கூறினார்.

பின்னர், அதை ஒப்படைப்பதற்கு ரூ.50 ஆயிரம் தர வேண்டும் எனவும், இல்லையென்றால் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்வேன் எனவும் மிரட்டியதாக அந்த இளம்பெண் குறிப்பிட்டிருந்தார்.

அந்த புகாரை பெற்றுக் கொண்ட பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே அந்த நபர், மீண்டும் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டி பேசியுள்ளார். அப்போது பொலிசார், அந்த பெண்ணிடம் பணம் வழங்குவதற்கு சம்மதம் தெரிவிக்கும்படி கூறியுள்ளனர். உடனே அந்த பெண், பணம் தர அந்த நபரிடம் சம்மதித்துள்ளார்.

இதையடுத்து அந்த நபர் தாம்பரம் ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை பணத்துடன் வரும்படி கூறியுள்ளார்.

அதன்படி குன்றத்தூர் பொலிசார், அந்த பெண்ணுடன் அந்த நபர் வரக் கூறி இடத்துக்குச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஒரு நபர், அந்த பெண்ணிடம் பணத்தைக் கேட்டுள்ளார்.

அந்த நேரத்தில் அங்கு மறைந்திருந்த பொலிசார், அந்த நபரை கையும்களவுமாக பிடித்துள்ளனர். பொலிசார், விசாரணை செய்ததில் அவர், காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள செல்வராஜ்நகர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த க.அமீத் (27) என்பது தெரியவந்ததுள்ளது.

இதையடுத்து பொலிசார்,அமீத்தை கைது செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொலிசார் நடத்திய விசாரணையில், இதேபோல பல பெண்களை மிரட்டி பணம் பறித்திருப்பது தெரியவந்துள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...