யாழ். பல்கலைக்கழக மோதலுக்கு இவர்களே பொறுப்பு! – அமைச்சர் அதிரடி..

Share this post:

sandai
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்கு பல்கலைக்கழக அதிகாரிகளே பொறுப்பு சொல்ல வேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

யாழ். பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்கு அந்தப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரிகளே முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பில் நான் மிகவும் வருந்துகின்றேன். இவ்வாறான சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை.

இனவாதம், கடும்போக்குவாதம் போன்றவற்றை பரப்பி மீளவும் பீதியை ஏற்படுத்த நாம் இடமளிக்க மாட்டோம்.

இந்த சம்பவம் ஆட்சிக் கட்டமைப்பிற்கு புறம்பாக இடம்பெற்றுள்ளது. இவ்வாறான சம்பவங்களினால் தேசிய ஒற்றுமைக்கோ நல்லிணக்கத்திற்கோ பாதிப்பு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடமும் பொலிஸ் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்தேன்.

குறித்த ஆணைக்குழுக்களினதும் கிளைகள் யாழ்ப்பாணத்தில் காணப்படுவதினால் விசாரணை நடத்தி உரிய அறிக்கை வழங்குவார் என எதிர்பார்க்கின்றோம் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...