இளம்பெண் ஒருவரை கற்பழித்து கொலை செய்த வாலிபர்களை கட்டி வைத்து அடித்துக் கொன்ற கிராம மக்கள்… – சரியான பதிலடி…

Share this post:

attack

இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தவுலதேவி கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் வெமுலா ஸ்ரீசாய் ,ஜொன்னா பவன் குமார் . இவர்கள் இருவரும் அங்கு ஒரு வீட்டுக்குள் புகுந்து உள்ளனர்., அங்கு தனியாக இருந்த ஜாஸ்மீன் (வயது 19) என்ற இளம் பெண்ணை தாக்கி உள்ளனர்.

அந்த பெண்ணும் அவர்களுடன் போராடி உள்ளார். அந்த வாலிபர்கள் இளம் பெண்ணை பாலியல பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் வாலிபர்கள் இருவரும் அந்த பெண்ணிகழுத்தில் பெல்டால் இறுக்கி கொலை செய்து உள்ளனர். பின்னர் அவரது உடலை தூக்கி அங்கிருந்த சிலீங் பேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது போல் மாட்டி உள்ளனர்.

பின்னர் ஊரில் உள்ளவர்களை அழைத்து அந்த பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து வைக்க இருந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளனர்.

இதை தொடர்ந்து கிராமத்தினர் அந்த வீட்டின் முன் குவிந்தனர். பின்னர் இளம் பெண்ணின் உடலை பேனில் இருந்து இறக்கு பார்த்த போது உடலில் காயங்கள் இருந்து தெரியவந்து உள்ளது இதை தொடர்ந்து. சந்தேகம் அடைந்த கிராமத்தினர் இருவாலிபர்கலையும் அங்கிருந்த மரத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்து உள்ளனர்.

தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து உள்ளனர். உடனடியாக இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஸ்ரீசாய் மரணமடைந்தார்.பவன்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜாஸ்மீன் உடல் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...