ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் அடித்த அதிஷ்டக் காற்று…

Share this post:

teacher

நாட்டில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீள் இணைத்துக் கொள்ளும் திட்டமானது ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில் விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இதேவேளை, குறிப்பிட்ட சில பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாலும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பயிற்சி பெறும் வரை 60 வயதிற்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்களை வேலையில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பல்கலைகழகங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, மாவட்ட ரீதியில் 50% வீதமானோரும் பிரதேச செயலக மட்டத்தின் கீழ் 50% வீதமானோரும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...