கதிர்காமத்திற்குச் சென்ற தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்!!

Share this post:

kathir

நேற்று சரியாக 12 மணியளவில் கதிர்காமத்தில் இருந்து 7 மலை செல்லும் வழியில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது வாகனத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கதிர்காமம் 7 மலை பகுதியை சேர்ந்த வாகன சாரதிக்கு முந்தி செல்ல இடமளிக்கவில்லை என கூறியே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது எமது இடம் உங்களை யார் வர சொன்னது என தகாதவார்த்தையால் திட்டியதுடன் கத்தியை கொண்டு குத்துவதற்கு முயன்றுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இலக்கனா மட்டக்களப்பை சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளதுடன் வாகனமும் சேதமடைந்துள்ளது . தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கதிர்காம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...