ஜேர்மனி அரசின் அதிரடி அறிவிப்பு! அகதிகளாக ஜேர்மன் செல்கிறவர்களுக்கு அடிக்கப்போகின்றது அதிஷ்டம்!

Share this post:

welcome

ஜேர்மனியில் குடியேறியுள்ள அகதிகளுக்கு உடனடி வேலை வழங்க வேண்டும் என அந்நாட்டு நிறுவனங்களை வலியுறுத்தி துணை சான்சலர் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் புகலிடம் கோரி ஜேர்மனி நாட்டிற்கு சுமார் 2 மில்லியன் நபர்களுக்கு மேல் சென்றுள்ளனர்.

இவர்களில் 60 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் சிரியா நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

ஜேர்மனியில் புகலிடம் பெற்றுள்ள அகதிகளுக்கு நிறுவனங்கள் முன்வந்து வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என ஜேர்மனி அரசு ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜேர்மனியை சேர்ந்த Frankfurter Allgemeine என்ற செய்தி நிறுவனம் அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இதில், கடந்த யூன் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 6,65,000 பணியிடங்கள் காலியாக இருந்துள்ளன.

இவற்றில் ஜேர்மனியில் உள்ள 30 முன்னணி நிறுவனங்கள் 54 அகதிகளுக்கு மட்டுமே வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளன. இவற்றில் Deutsche Post என்ற ஒரு நிறுவனம் மட்டும் 50 அகதிகளை பணிக்கு அமர்த்தியுள்ளது.

செய்திகளில் வெளியாகியுள்ள இந்த தகவலை தொடர்ந்து, ஜேர்மனியின் துணை சான்சலரும், பொருளாதார துறை அமைச்சருமான சிக்மர் கேப்ரியல் நிறுவனங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ‘ஜேர்மனியில் புதிய வாழ்க்கையை தொடங்க புகலிடம் கோரி வந்திருக்கும் அகதிகளை ஒருங்கிணைப்பது நம்முடைய முக்கிய கடமையாகும்.

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் நிறுவனங்கள் தாமாக முன்வந்து கூடுதலான அகதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும்’ என அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...