யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ்- சிங்கள மாணவர்களிடையே கடும் மோதல்! காலவரையின்றி மூடப்பட்டது விஞ்ஞானபீடம் – பல மாணவர்கள் கைது….(Photos)

Share this post:

1

யாழ்.மருத்துவ பீடத்தின் புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் பல்கலைக்கழக மருத்துவ பீட புகுமுக மாணவர்களுக்கான வரவேற்புநிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ் கலாச்சாரப்படி வரவேற்பு நடனம் நடத்த வேண்டும் என தமிழ் மாணவர்களும் கண்டிய நடனம் நடத்த வேண்டும் என சிங்களமாணவர்கள் கேட்ட நிலையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையிலும் மோதல்இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் புகுமுக மாணவ ர்கள் வரவேற்பு நிகழ்வில் கண்டி ய நடனம் இடம்பெற வேண்டும் என சிங்கள மாணவர்கள் கேட்ட நிலையில் இந்த கைகலப்பு உருவான நிலையில் பெரும் மோதலாக அது மாறியது.

இந்நிலையில் மா ணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் இம் மோதலில் தலையிட்டு ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுடனும் மாணவர்கள் கடுமையாக முரண்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர்களை தூசண வார்த்தைகளால் சிங்கள மாணவர்கள் பேசியுள்ளனர்.

குழப்பம் விளைவித்த பல்கலை மாணவர்கள் கைது!

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர்கள் வரவேற் பு நிகழ்வில்மாணவர்களுக்கிடை யில் நடைபெற்ற மோதலையடுத்து விஞ்ஞான பீடம் காலவரையறையற்றவகையில் மூடப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் கூறியுள்ளார்.
மேற்படி, விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில் மோதல் நிலையை அடுத்துவிஞ்ஞான பீடம் காலவரைய றை இல்லாமல் மூடப்பட்டுள்ளது.

விடுதிகளில் உள்ளவிஞ் ஞான பீட சிங்கள மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேற உ த்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணைகள் நடத்தப்ப ட்டுசம்மந்தப்பட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என மேலு ம் அவர்கூறியுள்ளார்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து பொலிஸ்புலனாய்வாளர்களின் துணையுடன் சிங்கள மாணவர்க ள் தமிழ் மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்வதா க தமிழ் மாணவர்கள் கூறியுள்ளனர்.

13714569_795208820580438_2036736958_n

13769441_1246525465380577_8274528081092053175_n

13729096_1246525588713898_9050771263614425339_n

13700041_528942517310980_5371220377386740018_n

1

image-0-02-01-e71f8802bfe5e46c384ff5beb48b6ef828f656ad7dfdb8d7c8570e997d2bc31f-V

Share This:
Loading...

Related Posts

Loading...