மகளிடம் கண்ணீர் விட்டு கெஞ்சிய தந்தை! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள் எல்லாம் காதல் செய்த மாயம்…

Share this post:

love

காதல் திருமணம் செய்து கொண்ட மகளிடம் கையெடுத்து கும்பிட்டு வீட்டுக்கு வந்துவிடு என தந்தை கெஞ்சியது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வினிதா, மன்சூர் அலி ஆகிய இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர், இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள் திருமணம் செய்து கொண்டு சென்னை மாநகர காவல் ஆணையாளர்கள் அலுவலகத்தில் பாதுகாப்பு கோயுள்ளனர்.

இதற்கிடையில் வினிதாவின் பெற்றோர், வேலூர் மாவட்டத்தில் தங்களது மகளை கடத்தி சென்றுவிட்டதாக பொலிசில் புகார் அளித்தனர்,

சென்னை காவல் ஆணையர் அலுவலகம், வேலூர் எஸ்.பி. அலுவலகத்துக்கு காதல் ஜோடியை அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் மாலை எஸ்பி அலுவலகத்துக்கு வந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்தனர்.

அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி விரிஞ்சிபுரம் பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில், கடத்தல் புகார் காரணமாக அவர்கள் இருவரையும் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, இவர்கள் மேஜர் என்பதால் விரிஞ்சிபுரம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு சேர்ந்து வாழவேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

ஆனால், நீதிமன்றத்திற்கு வந்த வினிதாவின் தந்தை, தனது மகளிடம், வெளியில் தலை காட்ட முடியவில்லை, நீ எங்களோடு வந்துவிடு, இல்லையென்றால் நாங்கள் இறந்துவிடுவோம் என கையெடுத்து கும்பிட்டு கெஞ்சியுள்ளார்,

ஆனால், வினிதாவே மனம் இறங்காமல், நான் காதலனோடு தான் செல்வேன் என கூறியுள்ளார், பின்னர் வினிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களை பொலிசார் கலைந்து செல்லுமாறு கூறினார்கள்.

இதை ஏற்காமல் திடீரென பொலிஸ் ஜீப் முன்பு ரோட்டில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் பொலிசார் சமாதானத்தை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் வினிதாவின் தந்தை நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறியது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This:
Loading...

Recent Posts

Loading...