நாயை காலால் அடித்துக் கொன்ற கணவன் – கோபத்தில் மனைவி தற்கொலை- அதே கயிற்றில் தூக்கிட்டு கணவரும் சாவு…

Share this post:

pen

மனைவி தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியடைந்த கணவன் அதே கயிற்றில் தூக்குப்போட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த புதுக்குளத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(30), வெல்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி வேம்பு(19). இவர், தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

கடந்த சில மாதங்களாக வேம்பு நாய் வளர்த்து வந்தார். நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த கோவிந்தராஜ் நாயை காலால் உதைத்தார். இதில் நாய் இறந்தது. இதனால் கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமுற்ற வேம்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் மனைவி உடலை கயிற்றில் இருந்து கழற்றி படுக்க வைத்துவிட்டு அதே கயிற்றில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதே ஊரை சேர்ந்த பூமாலை என்பவர் கோவிந்தராஜ் வீட்டின் அருகில் நாய் இறந்து கிடப்பதை பார்த்து சந்தேகமடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது கோவிந்தராஜ், வேம்பு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தம்பதியின் உடல்களை கைப்பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணம் ஆகி 2 வருடம் மட்டுமே ஆனதால் விருத்தாசலம் ஆர்.டி.ஓ செந்தில்குமார் விசாரணை நடத்த உள்ளார்.

மனைவியும், கணவனும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...