திருமணம் ஆகாமல் பிறந்த குழந்தையை பையில் போட்டு எடுத்துச் சென்ற பெண் கைது…

Share this post:

baby

கலியாணம் கட்டாமல் குழந்தை பெற்ற 19 வயது தயந்தி!! பெற்ற குழந்தையை பையில் எடுத்துச் சென்றார் குழந்தை ஒன்றை பிரசவித்த 19 வயதான யுவதி ஒருவர் அந்த குழந்தையை பையொன்றி போட்டு எடுத்துச் சென்றுக்கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராகலை பொலிஸார் இந்த யுவதியை நேற்று கைது செய்துள்ளனர்.

தங்கவேல் தயந்தி என்ற யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யுவதி ஒருவர் குழந்தையை பையில் இட்டு எடுத்துச் செல்வதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்தே பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

யுவதி சுகவீனமான நிலையில் இருப்பதால், பொலிஸார் அவரை நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

யுவதி சம்பவம் குறித்து எதனையும் கூறவில்லை எனவும் யுவதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...