நைஸ் நகரில் தாக்குதல் நடத்தியது யார்? உங்கள் உறவுகள் பத்திரமா?

Share this post:

p7-2-670x499

பிரான்சின் நைஸ் நகரில் தாக்குதல் நடத்தியது துனிஷியா நாட்டை சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்க நபர் என்பது தெரியவந்துள்ளது.

பிரான்சின் நைஸ் நகரில் Bastille Day கொண்டாட்டத்தில் ஈடுபட்டிந்த போது திடீரென லொறி வந்து மக்கள் கூட்டத்தில் புகுந்தது.

இந்த தாக்குதலில் இதுவரையிலும் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

லொறியை கொண்டு வந்து மக்கள் கூட்டத்தில் செலுத்தியவுடன், அதிலிருந்து இறங்கிய ஓட்டுனர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிகிறது.

தொடர்ந்து லொறியில் இருந்த ஆவணங்களை சோதனை செய்து பார்த்ததில் அவர் துனிஷியா நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தங்களது சொந்த பந்தங்கள் பத்திரமாக உள்ளனரா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் சமூகவலைத்தளமான டுவிட்டரில் #RechercheNice (#SearchNice) மற்றும் #NiceFindPeople டிரெண்டாகி வருகின்றன.

இந்த ஹாஷ்டேக்குகளை பயன்படுத்தி மக்கள் தகவல்கள், புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இத் தாக்குதல் தொடர்பான முழுமையான செய்தி மற்றும் படங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Share This:
Loading...

Related Posts

Loading...