வட்டிக்குப் பணம் கொடுத்துவிட்டு திருப்பிக் கேட்ட பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற பெண் ….

Share this post:

knife

கத்திக்குத்துக்கு இலக்காகிய பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் திருகோணமலை சேனையூர் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 41 வயதான இளங்குமார் சாந்தமலர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவத்தில் உயிரிழந்த பெண் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அயல் வீட்டாருக்கு வட்டிக்குக் பணம் பெற்றுக்கொடுத்துள்ளார்.

எனினும், குறித்த பணத்தை மீள பெற்றுக்கொள்ள முடியாத அந்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்ட நாள் முதல் அயல் வீட்டுப்பெண்ணுக்கும், உயிரிழந்த பெண்ணுக்கும் இடையில் முறன்பாடு தோன்றியுள்ளது.

இந்த முறன்பாடு இன்று கைகலப்பாக மாறிய நிலையில், இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...