பெண் ஒருவரை ஏமாற்றி குடும்பம் நடத்திய இளைஞன் -கத்தியால் குத்திக் கொன்ற பெண்ணின் தந்தை…

Share this post:

kaththi

22 வயது யுவதியை ஏமாற்றி குடும்பம் நடத்திய 23 வயது இளைஞனை, யுவதியின் தந்தை குத்திக் கொலை செய்த சம்பவம், எல்ல, உடஆராவ பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த ஹர்ஷ விஜேசிறி என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இவ்விளைஞன் ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் செய்தவரென்றும் மூன்றாவதாகவே மேற்படி யுவதியுடன் குடும்பம் நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய யுவதியின் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...